கேட்டதில் பிடித்தது

ஒரு காட்டில், கிளியும் காகமும் பேசிகொண்டிருந்தன

    கிளி காகத்திடம் சொன்னது, என் பக்கத்து உட்காராதே, தள்ளி போ

   காகம் கேட்டது, ஏன் என்னை ஒதுக்குரன்னு

   அதற்கு கிளி சொன்னது நீ கருப்பாய் அசிங்கமா இருக்க. நான் பல வண்ணங்களில் அழகா இருக்கிறேன். ஆகவே, நீ என் பக்கத்துல உட்காரதே.

  காகம் சொன்னது என்ன செய்ய இயற்கை(கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும்) என்னை கருப்பாய் படைத்துவிட்டது நான் என்ன செய்ய?

  அந்நேரம் அங்கு வந்த வேடன், கிளியை பிடித்து சென்றான். மனம் கேட்காமல் காகம் அவர்களை பின்தொடர்ந்தது. வேடன் கிளியை கூண்டில் அடைத்து வைத்து அதை பேச வைக்க அதை இம்சித்தான்.

   அந்நேரம் வேடனின் மனைவி தட்டில் படையல் இட்டு அதை மேற்கூரையில் வைத்து, "கா கா கா" என்று கத்தினாள்.

இதை பார்த்துவிட்டு காகம் கிளியிடம் சொன்னது, பல வண்ணங்களில் அழகாக இருக்கும் உன்னை அவன் மொழி பேச வைக்க துன்புறுத்துகிறான். ஆனால் எனக்கு விருந்து வைத்து என்னை என் மொழியில் அழைக்கிறான்.

(நான் கேடியின் பொங்கல் வாழ்த்தை குறிப்பிடவில்லை)

SHARE

Author

அரசியல் சிந்தனைகளுடன் சமூக விழிப்புணர்வு. மாற்றம் என்னுள்ளிருந்து

  • Facebook
  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Popular Posts